1912 முதல் இன்று வரை......
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நம் முன்னோர்களை இந்தியாவில் இருந்து மலாயாவுக்கு இறக்குமதி செய்து பல காடு மேடுகளை குடியிருப்பு பகுதியாகவும் மாட கோபுரங்களாகவும் கட்ட நம்மை சக்கையாக பிழிந்து எடுத்தான் அன்னியன்.
அந்தக் காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் பெரும்பகுதியாக இந்தியர்கள் குடியேறியப் பகுதி கேரித்தீவு,கோலாசிலாங்கூர் மற்றும் கிள்ளான்.
இந்தக் காலக்கட்டத்தில் கேரித்தீவு,பெரிய பிறட்டு இந்தியர்கள் பெரும் பகுதி வாழ்ந்ததாக குறிப்புகள் காட்டுகின்றன.அந்தக் காலக்கட்டத்தில் கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்ற பழமொழிக்கு ஒப்ப 1900 ல் கேரித்தீவில் முதலில் எழுப்பப்பட்ட முதல் கோயில் பெரிய பிறட்டு (டிவிசன் 1) சிறி மகா மாரியம்மன் ஆலயம் ஆகும்.
திருத்தம்: ஸ்ரீ
ReplyDelete